சனி, 13 டிசம்பர், 2014

முல்லைப்பெரியாறு அருகே கேரளா புதிய அணை? ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி!

சென்னை: முல்லைப்பெரியாறு அருகே கேரளா புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப்பெரியாறு அணையில், கேரளா புதிய அணை கட்டுவதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இருக்கும் நிலையில், புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்திருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறும் செயல். எனவே ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கக்கூடாது என கூறியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக