வெள்ளி, 19 டிசம்பர், 2014

மணிரத்தினத்தை காய்ச்ச்சிய கீது மோகன்தாஸ்


நள தமயந்தி, பொய், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படங்களில் நடித்திருப்பவர் கீது மோகன்தாஸ். மல்லுவுட் கேமராமேன் மற்றும் இயக்குனருமான ராஜீவ் ரவியை மணந்தார். சமீபத்தில் ராஜீவ் ரவி இயக்குனர்கள் மணிரத்னம், மல்லுவுட் நடிகர் சீனிவாசன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ' மணிரத்னம் தனது படங்கள் மூலம் நிறைய இளைஞர்களை (இளம் ஹீரோக்கள், டெக்னீஷியன்களை சரிவர பயன்படுத்தாமல்) வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதுபோல் மல்லுவுட் நடிகர், இயக்குனர் சீனிவாசன் தனது படங்கள் மூலம் சமுதாயத்துக்கு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ததில்லை'  என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


கணவரின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் கீது மோகன்தாஸ். அவர் கூறும்போது,‘ராஜீவ் என்ன கருத்து கூறினாரோ அதை தெளிவாகவும், உரக்கவும் கூறி இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. ஒரு படத்தை ரசிப்பதும், வெறுப்பதும் அவரவர் எண்ணங்களின் அடிப்படையில் அமைவதுதான். ஒவ்வொரு வேலையும் அல்லது படைப்பும் விமர்சனத்துக்குரியது. அதைவெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை எதிர்ப்பது சரி அல்ல. வெளிப்படையான கருத்துகள் தெரிவித்து ஆரோக்கியமாக கலந்துரையாடுவதன் மூலமே நல்ல படம், நல்ல கலாசாரத்தை அடையாளம் காண முடியும்‘ என இணைய தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக