திங்கள், 15 டிசம்பர், 2014

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து மார்ச் மாதம் முதல் துவக்கம்


சென்னை  ,டிச.13 (டி.என்.எஸ்) கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்து  வரும் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது.கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உயர்மட்ட ரயில்  பாதை அமைக்கும் பணி முழுமை அடைந்துள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது. சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி 5 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக ஷெனாய்நகர்– திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இன்று காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த நல்ல திட்டம் முடக்காமல் விட்டதற்கு மாமுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்
பின்னர் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 5 கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஒன்றான ஷெனாய்நகர்– திருமங்கலம் இடையே 4 கி.மீ தூரம் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதன் இடையே அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. 2016–ல் இந்த பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கும்.

ஆலந்தூர்–பரங்கிமலை– சின்னமலை–விமான நிலையம் வழிதடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரயில் ஓடும். 2017–ம் ஆண்டிற்குள் அனைத்து வழிதடத்திலும் மெட்ரோ ரயில் ஓடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக