சனி, 13 டிசம்பர், 2014

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரம் குறைக்கப்படுகிறது ! மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி : சி.பி.ஐ., இயக்குனரின் அதிகாரத்தை, குறைப்பதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு துவக்கி உள்ளது. இதன்மூலம், சி.பி.ஐ.,யில் வழக்குகளை கையாளும் பிரிவின் இயக்குனரை, தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க உள்ளது.மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யின் இயக்குனர், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய, மூவர் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்.அதேநேரத்தில், சி.பி.ஐ.,யில் வழக்குகளை கையாளும் பிரிவானது, கடந்த ஆண்டு வரை, மத்திய சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. அதனால், இந்தப் பிரிவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, சி.பி.ஐ.,க்கும், மத்திய அரசுக்கும் இடையே, நீண்ட நாட்களாக மோதல் நிலவியது.  முதலில் ஒரு சி.பி ஐ இயக்குனர் மாத்திரம் சம்பாதித்தார் . இனிமேல் இரண்டு சி.பி.ஐ இயக்குனர்கள் சம்பாதிப்பார்கள் .


இந்த பிரச்னையை தீர்க்க, பார்லிமென்டின் தற்போதைய குளிர்கால கூட்டத்தில், சி.பி.ஐ., தொடர்பாக, புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. இந்தச் சட்டத்தில், சி.பி.ஐ.,யில், வழக்குகளை கையாளும் பிரிவின் இயக்குனரை, தன்னிச்சையாக செயல்பட வைப்பதற்கான விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.ஏனெனில், வழக்குகளை கையாளும் பிரிவின் இயக்குனரை, சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதன் மூலம், வழக்குகள் தொடர்பாக முடிவெடுக்கும் விஷயத்தில், சி.பி.ஐ., இயக்குனரின் ஆதிக்கம் குறையும்.புதிய சட்டம் அமலுக்கு வரும் போது, வழக்குகளை கையாளும் பிரிவின் இயக்குனர், வழக்குகள் விஷயத்தில் தன்னிச்சையாக முடிவெடுப்பதோடு, சி.பி.ஐ., இயக்குனரின் முடிவுக்கு எதிராக, மாறுபட்ட கருத்தையும் தெரிவிக்க முடியும். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக