திங்கள், 15 டிசம்பர், 2014

ஆஸ்திரேலியா: தப்பிய 5 பேர்: பிணைக்கைதியாக இந்தியர் இருப்பதாக தகவல்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மாட்டின் பிளேஸில் இயங்கி வரும் மிகப் பிரபலமான உணவகம் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் காவல்துறையினரால் சுற்று வளைக்கப்பட்டுள்ளது.பயங்கரவாதிகளிடம் இருந்து 5 பேர் தப்பி ஓடி வந்தனர். தொடர்ந்து பிணைக்கதைிகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.>இந்நிலையில் பயங்கரவாதிகள் பிடியில் பிணைக்கைதியாக இந்தியர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. பிணைகைதியாக பிடிபட்டுள்ள இந்தியர் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார் இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.nakkheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக