வியாழன், 11 டிசம்பர், 2014

அஞ்சலி1 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்தார் -

கோலிவுட்டில்< இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தியோடு சண்டைபோட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்றார் அஞ்சலி. ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும் ஹிட்டாக அமைந்தது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு குவியவில்லை. தம் கட்டிப்பார்த்தும் பாச்சா பலிக்காததால் மீண்டும் கோலிவுட் பக்கம் பார்வையை திருப்பி இருக்கிறார். இதற்கிடையில் அனுஷ்கா நடிப்பதாக இருந்த ‘பாகமதி' டோலிவுட் படத்தில் அவருக்கு பதிலாக அஞ்சலியை நடிக்க கேட்டனர். அனுஷ்கா நடிக்கவிருந்த வேடம்னா சூப்பராகத்தான் இருக்கும் என்றவர் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் நலவிரும்பிகள் அவர் காதை கடிக்கத் தொடங்கினர்.
‘உடனே ஏன் ஒப்புக்கிட்ட? சம்பளத்தை ஏற்ற இதுதான் சரியான நேரம். விடாதே சம்பளத்தை உயர்த்தி கேள்' என்று உசுப்பியதும் உஷாராயிட்டாராம். ‘கோலிவுட்டில் நிறைய படங்களில் இப்போது நடிக்க ஒப்புக்கொள்கிறேன். இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால் ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன். இப்படத்தை ஒப்புக்கொள்வதென்றால் ஏற்கனவே பேசி வரும் 2 படங்களை நான் கைவிட வேண்டி வரும். அந்த சம்பளத்தை ஈடுகட்டத்தான் இந்த சம்பளம் கேட்கிறேன்' என்று தயாரிப்பாளரிடம் ஒரே போடாக போட்டாராம் அஞ்சலி. இதை கேட்டு ஷாக் ஆகி வாயடைத்து நிற்கும் தயாரிப்பு, ‘உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் பொதுவா ஒரு தொகையை சொல்லுங்க‘ என்று கூறி பேரம் நடக்கிறதாம். - S.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக