வியாழன், 6 நவம்பர், 2014

வாசன் கட்சியின் பெயர் 'த.மா.தே.கா TMTC ?தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் !

இது குறித்த அறிவிப்பு கட்சி துவக்க விழாவில் வெளியிடப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்ட உடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன். கட்சியை விட்டு வெளியேறிய அவர் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை துவங்க முடிவு செய்தார். கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை நடந்து வந்தது. இந்நிலையில் கட்சிக்கு தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.  கட்சியின் பெயர் திருச்சியில் நடக்கும் கட்சி துவக்க விழாவில் அறிவிக்கப்படுகிறது. அப்பொழுது கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்படும். திருச்சியில் கட்சி துவக்க விழா நடக்கும் என்று வாசன் அறிவித்தார். ஆனால் தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வரும் 22ம் தேதி அமாவாசை அன்று கட்சி துவக்க விழாவை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு வாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக