வியாழன், 6 நவம்பர், 2014

பாவனா படதயாரிப்பாளரை திருமணம் புரிகிறார் ! காதலராம் !

திருவனந்தபுரம்: நடிகை பாவனா பட தயாரிப்பாளரை காதல் திருமணம் செய்கிறார்.‘சித்திரம் பேசுதடி’, ‘ஜெயங்கொண்டான்’, ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘ராமேஸ்வரம்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பாவனா. இப்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். 2012ம் ஆண்டு இவர் நடித்த ‘ரோமியோ’ என்ற கன்னடப் படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவர் நவீன். இவரும் பாவனாவும் காதலித்து வருவதாக முதலில் செய்தி வெளியானது. இதுபற்றி அப்போது கேட்டபோது, ‘நான் காதலிப்பது உண்மைதான். யார் என்பதை திருமணம் நடக்கும்போது சொல்கிறேன்’ என்று கூறியிருந்தார் பாவனா. நவீனும், ‘பாவனா என் தோழி’ என்று மட்டும் சொல்லி இருந்தார். இப்போது இந்தக் காதல் உண்மை என தெரியவந்துள்ளது. அடுத்த வருட தொடக்கத்தில் இவர்கள் திருமணம் பாவனாவின் சொந்த ஊரான திருச்சூரில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி பாவனாவின் வீட்டில் விசாரித்தபோது, ‘ஜனவரி மாதம் 18-ம் தேதி பாவனாவின் சகோதரருக்கு திருமணம் நடக்கிறது. அதற்குப் பிறகு பாவனாவின் திருமணம் நடக்கும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது’ என்றனர். மாப்பிள்ளை யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்  என்றனர். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக