செவ்வாய், 18 நவம்பர், 2014

பெரியாறு அணையில் கேரளா MLA பிஜூமோள் அத்துமீறல்: அணை பாதுகாப்பு கேள்விக்குறி?

கூடலூர் : முல்லைப் பெரியாறு அணையில் நேற்று பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோள் தலைமையில் சென்ற கேரள பத்திரிகையாளர்கள், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை கீழே தள்ளிவிட்டு பேபி அணைக்குள் அத்துமீறி நுழைந்து போட்டோ எடுத்தனர். அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார் இதை கண்டுகொள்ளாததால் அணைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்குப்பின் நீர்மட்டம் நேற்று 141 அடியைக் கடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அணையில் தண்ணீர் தேங்க இன்னும் ஒரு அடியே உள்ள நிலையில் தமிழக பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  பிஜுமோள் போன்ற மலையாளிகளை உசுப்பி விட்டது வைகோதான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் மனம் குழம்பி போயிருந்த மலையாளிகளை மேலும் கோபம் அடைய செய்யும் விதமாக வெற்றியை கொண்டாடி டிவிக்களில் பேசினார் .ஏதோ மலையாளிகளை போரில் வென்றது போல சவடால் முழக்கம் இடுவது பட்டாசு கொழுத்துவது மலர் தூவுவது போன்ற முட்டாள்தனமான செய்கைகளை செய்து மலையாளிகளை பகையாளி ஆக்கிவிட்டனர்Hate  அரசியலை நடத்தும் வைக்கோ போன்றவர்களால் தான் பிஜுமோள் போன்ற அரசியல்  வாதிகளுக்கு அவல் கிடைத்துவிட்டது, மீண்டும் பெரியாறுஅணை பிரச்சனை தலை எடுத்தால் வைகோ போன்றவர்களே பொறுப்பு ,
நீர்மட்டம் 142 அடியை நெருங்கியுள்ள நிலையில் இன்று (நவ. 18) அணைப்பகுதிக்கு கிரீஸ் ஹரிஸ் தலைமையிலான துணைக்குழுவினர் ஆய்வு செய்ய வருகின்றனர். இச்சூழ்நிலையில் நேற்று பகல் திடீரென பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோள் ஒரு படகில் அணைப்பகுதிக்கு சென்றார். அவருடன் இரண்டு கேரள நிருபர்களும் வந்தனர். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு படகில் 30க்கும் மேற்பட்ட கேரள பத்திரிகையாளர்கள் அணைப்பகுதிக்கு வந்தனர்.பிஜூமோள் தலைமையில் அனைத்துப் பத்திரிகையாளர்களும், மெயின் அணை வழியாக பேபி அணைக்கு சென்றனர். தள்ளி விட்டனர்: >மெயின் அணையில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரும், துணைக்குழுவில் தமிழக அரசு சார்பில் இடம் பெற்ற உறுப்பினருமான மாதவன் நின்றிருந்தார். எவ்வித அனுமதியுமின்றி பேபி அணைக்கு செல்ல முயன்ற கேரள பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தினார். இதை கண்டு கொள்ளாத கேரள பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்திய செயற்பொறியாளர் மாதவனை தள்ளி விட்டு அத்துமீறி பேபி அணைப்பகுதிக்குள் நுழைந்தனர். வனப்பகுதிக்குள் தடைசெய்யப்பட்டுள்ள பேபி அணைக்கு பின் பகுதி வழியாக சென்ற பிஜூமோள் மற்றும் பத்திரிகையாளர்கள் பேபி அணையின் பின்பகுதியில் தண்ணீர் கசிந்து செல்வது போல் படம் எடுத்தனர். ஒரு மணி நேரம் வரை பேபி அணையில் படம் எடுத்து விட்டு படகில் தேக்கடிக்கு திரும்பிச் சென்றனர்.தமிழக அதிகாரியை தள்ளி விட்டு படம் பிடிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்கள் குறித்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசாரிடம் செயற்பொறியாளர் மாதவன் புகார் கூறினார். கேரள பத்திரிகையாளர்களை நாங்கள் எதுவும் கூற முடியாது, என மவுனமாகி விட்டனர். மேலும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததையும் கேரள போலீசார் கண்டு கொள்ளவில்லை.தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவனை தள்ளிவிட்டு, பேபி அணைக்கு அத்துமீறி நுழைந்துள்ளனர். அணைப்பகுதியில் தமிழக அதிகாரிகள் சிலர் மட்டுமே உள்ளனர். இது தவிர ஓரிரு தொழில் நுட்ப உதவியாளர்களும், அலுவலக உதவியாளர்களும் அணைப்பகுதியில் உள்ளனர். இச்சூழ்நிலையில் கேரள போலீசாரை நம்பியே அவர்கள் உள்ளனர். தமிழக செயற்பொறியாளரை தள்ளி விட்டு சென்ற அவர்களை, கேரள போலீசார்களும் கண்டு கொள்ளாததால் அணையில் தங்கியுள்ள தமிழக அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மாதவன் கூறியதாவது: அணைப்பகுதிக்கு பிஜூமோளுடன் வந்த 40 க்கும் மேற்பட்ட கேரள பத்திரிகையாளர்கள், இங்கு வருவதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. மேலும், பேபி அணைக்கு செல்லவேண்டாம் என தடுத்தேன். ஆனால் என்னை தள்ளிவிட்டு அத்துமீறி பேபி அணைப்பகுதிக்குள் நுழைந்து போட்டோ எடுத்தனர்.இது குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசாரிடம் கூறினேன். அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து தமிழக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன், என்றார். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது பீர்மேடு எம்.எல்.ஏ.,வுடன் சென்ற கேரள பத்திரிகையாளர்கள் மீண்டும் பிரச்னையை பெரிதாக்கியுள்ளனர். மத்திய பாதுகாப்பு படை வேண்டும்-தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்: முல்லைப் பெரியாறு மீட்புக்குழு தலைவர் ரஞ்சித் கூறியதாவது:பெரியாறு அணையில் பேபி அணையில் அத்துமீறி கேரள பத்திரிகையாளர்கள் நுழைந்துள்ளனர். இதனை தடுத்த தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவனை தாக்கும் நோக்கோடு தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். பேபி அணையை மரக்கிளையால் குத்தி சேதப்படுத்தி போட்டோ எடுத்துள்ளனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் எதையும் கண்டு கொள்ளவில்லை.தமிழக அதிகாரி தாக்கப்பட்டதாக கூறியும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துள்ளனர். அணையில் தங்கியிருக்கும் தமிழக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாததை இது காட்டுகிறது. தவிர, அணைப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. அணைப்பகுதியில் உடனடியாக மத்திய பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும், என்றார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக