திங்கள், 17 நவம்பர், 2014

நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்கிறார் ! லேட் நியுஸ் இது உண்மையில்லையாம்? கிளாமர் போயிடுமே? பிசிநேசு?


சென்னை,நவ.17 (டி.என்.எஸ்) தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார்.தெலுங்கு நடிகருடன் காதல், பிறகு முறிவு, திருமணம் என்று அவ்வபோது திரிஷா குறித்து செய்திகள் வெளியானாலும், இறுதில் அவை வெறும் வதந்திகளாகவே மாறியது.ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல், நம்பகமான தகவல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திரிஷாவுக்கு அவரது தயார் திருமணம் செய்ய முடிவு செய்து, மனமகனை தேடி வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வருண் மணியன், என்பவரை திரிஷாவுக்கு பேசி முடித்துள்ளார்களாம். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக விளங்கும் ரேடியன் சி, நிறுவன உரிமையாளரான வருண் மணியன் ரேடியன் மீடியா என்ற நிறுவனம் சார்பில் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'வாயை மூடி பேசவும்' இவர் தயாரித்த படம் தான். விரைவில் வெளியாக உள்ள, 'காவியத்தலைவன்' படத்தியும் வருண் மணியன் தயாரித்து வருகிறார்.


வருண் மணியனும், திரிஷாவும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு தொடர்ந்த நட்பின் மூலம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம். இவர்களுடைய திருமணம் நிச்சயதார்த்தம், எளிமையான முறையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து திரிஷாவின் அம்மாவின் கேட்பதற்காக, நிருபர்கள் அவரை தொடர்பு கொண்ட போது, அவருடைய போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பது தெரிந்தது. எனினும், திரிஷா - வருண் மணியன் திருமணம் உறுதியானது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக