புதன், 26 நவம்பர், 2014

குஷ்பூ காங்கிரசில் சேருகிறார்?சோனியாவை இன்று சந்திக்கிறார் Kushboo to meet Sonia, likely to join Congress


Party sources said the actor, who is in New Delhi now, got an appointment with AICC president Sonia Gandhi and party vice-president Rahul Gandhi at 5pm on Wednesday and is likely to formally join the Congress.சென்னை: நடிகை குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. திமுகவில் பரபரப்பாக இருந்த குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அரசியலை பற்றி நினைக்காமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குஷ்புவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சேரும் குஷ்பு? பாஜக தவிர அதிமுகவும் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் குஷ்புவோ தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவ்வாறு வந்த செய்தியில் உண்மை இல்லை. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்று ட்விட்டரில் தெரிவித்தார். குஷ்புவுக்கு  இனி எல்லாம் வெற்றிதான். இது நாள்வரை குஷ்புவை சமாதனபடுத்த திமுக தரப்பில் இருந்து ஏதும் முயற்சி எடுத்தார்களா என்பது தெரியவில்லை , அப்படி முயற்சி எடுத்திருக்காவிடில் நிச்சயம் திமுகவும் இன்னொரு அதிமுகதான். ஸ்டாலினின் அடிமைகள் கூடாரம்?
இந்நிலையில் குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்தித்து பேச உள்ளார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சேரும் குஷ்பு? இன்று காலை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு முடிவு வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கலாம்... கவனமாக சிந்திக்கவும்... உங்களுக்கு சரி என்று பட்டால் முடிவை எடுத்துவிட்டு திரும்பிப் பார்க்க வேண்டாம். கருத்துகள் வேறுபடும் என்று தெரிவித்துள்ளார். ஒரு வேளை கட்சியில் சேரும் முடிவை எடுத்துவிட்டாரோ?

//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக