புதன், 26 நவம்பர், 2014

காமராஜர்-மூப்பனார்-படங்கள்-அச்சிட்ட-புதிய-கட்சிக்-கொடி-ஜிகேவாசன்-அறிமுகம்

புதிய கட்சியின் கொடியை, சென்னையில் நடந்த கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்."  காங்கிரஸ் கட்சியின் கொடியைப் போலவே, ஜி.கே.வாசனின் புதுக்கட்சி கொடியிலும் சிவப்பு, வெள்ளை, பச்சை என மூவர்ணம் உள்ளது. வெள்ளை நிறப் பகுதியில் காமராஜர் மற்றும் மூப்பனாரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, கொடியில் சைக்கிள் சின்னத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வாசன் ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காவிட்டால் சிக்கலாகிவிடும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதற்கிடையில், புதிய கட்சி பெயர் மற்றும் கொடி அறிமுக பொதுக்கூட்டத்துக்காக திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2.5 லட்சம் சதுர அடியில் மைதானம் தயாராகி வருகிறது.
இந்த மைதானத்தில் 60 அடி அகலம், 40 அடி நீளத்தில் 2,400 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படுகிறது.
மேடைக்கு வலதுபுறத்தில் புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் இடதுபுறத்தில் தமிழக தலைமைச் செயலகம் ஆகியவற்றின் முகப்பு மாதிரிகள் அமைக்கப்படுகின்றன.
ஏறத்தாழ 50,000 தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படவுள்ளன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொண்டு வரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜ சேகரன் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதிலுமிருந்து 2.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். திருச்சியைச் சுற்றியுள்ள 13 மாவட்டங்களிலிருந்து மட்டும் 1.5 லட்சம் பேர் வருவார்கள். மாநாட்டுத் திடலில், ஜி.கே.வாசனின் 50-வது வயதைக் குறிக்கும் வகையில் 32 அடி (கூட்டுத் தொகை 5) உயர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. நவ. 28-ம் தேதி இரவு 7.30 மணியளவில் தலைவர் ஜி.கே.வாசன் பேசவுள்ளார்" என்றார்.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக