ஞாயிறு, 2 நவம்பர், 2014

Indo Pak வாகா எல்லையில் குண்டு வெடித்து 48 பேர் பலி 70 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்!

வாகா அருகே தற்கொலைப்படை தாக்குதலில் 48  பேர் பலி இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா அருகே, பாகிஸ்தான் பகுதியில், தற்கொலைப் படை தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளனர். வாகனம் நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குழந்தைகள் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலர் பலியானார்கள். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா எல்லையில், பாகிஸ்தான் எல்லையில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து லாகூர் மற்றும் பல அரசு மருத்துவ மனைகள் அனைத்தும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பஞ்சாப் போலீசார்,
சம்பவ இடத்திலிருந்து பத்திரிகையாளர்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சம்பவ இடத்தை ராணுவ அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கடைகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்கும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக