திங்கள், 3 நவம்பர், 2014

Hydrabad Gang Rape மாணவியை பலாத்காரம் செய்த 5 மாணவர்கள் !

ஹைதராபாத்தில் உள்ள பல்கழைக்கழக விடுதி ஒன்றில் மாணவி ஒருவர் 5 மாணவர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டார்.
தில்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் ஐதராபாத் தார்நாகா பகுதியின் இக்லு பல்கலைக்கழகத்தில் தங்கி படித்துவருகிறார். இவர் கடந்த 31ம் தேதி இரவு தனது நண்பரை பார்க்க மாணவர் விடுதிக்கு சென்றாராம். அப்போது அந்த நபர் அங்கு இல்லாததால், பக்கத்து அறையில் சென்று விசாரித்துள்ளார். மது விருந்தில் ஈடுபட்டிருந்த அந்த மாணவர்கள் மாணவியையும் அழைத்துள்ளனர். அழைப்பை ஏற்று மாணவியும் அதில் கலந்துகொண்டார்.  போதை அதிகமாகிய மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த மாணவி உஸ்மானியா பல்கலைக்கழக போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அனந்த புரத்தைச் சேர்ந்த நிதின்(25), கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ராஜநரசிம்பா ஆகிய 2 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தியபின் விடுவிக்கப்பட்டனர். மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக