திங்கள், 3 நவம்பர், 2014

சட்டீஸ்கர்: 136 போலீசை கொன்ற நக்சல் கைது

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் மற்றும் சுற்றுப்பகுதியில் 136 போலீசாரை சுட்டு கொல்ல காரணமாக இருந்த நக்சல் அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரை குறி வைத்து வன பகுதியில் தாக்குதல் நடத்துவதில் கை தேர்ந்தவன் ஹேமந்த் மண்டவி பிஜ்ஜா. கடந்த ஏப்ரல் மாதம் 2010ல் சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்டவத்தா மாவட்டத்தில் போலீசார் வாகனத்தில் ரோந்து சென்ற போது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நள்ளிரவில் எல்லை பாதுகாப்பு படையினர் கொத்து, கொத்தாக மடிந்தனர்.
இந்த சம்பவம் அந்நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. >இந்நாளில் 76 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவன் ஹேமந்த் மண்டவி . 136 போலீசை சுட்டு கொன்ற வழக்கில் இவனது பெயர் உள்ளது. இந்நிலையில் 5 ஆண்டுகளாக தேடப்பட்ட வந்த பிஜ்ஜா கைது செய்யப்பட்டுள்ளது. நக்சல் பாதிப்பு பகுதியில் பணியாற்றும் போலீசார் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக