சனி, 22 நவம்பர், 2014

பீகார் CM ஜித்தன் ராம் மாஞ்சி : கோவில் பெயரால் சுரண்டல்! கோவில்பூஜைகள் பார்பன ஜாதிக்கு மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்?.

பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார்.  பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது,  சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.
ஜாதியின் பெயரால் பிளவு
இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன.   உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர்.   கோவில் பெயரால் சுரண்டல்!
ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர்.  கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?
எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும் இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட் பாட்டை நான் பின்பற்று வதும் கிடையாது; அம் மதத்தின் அடையாள மான சாமிகளை நான் வீட்டில் வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட் டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் படம் மாத் திரமே இருக்கிறது என்று பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி கூறினார்.
.viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக