வெள்ளி, 21 நவம்பர், 2014

பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தாதாக்களின் கொலை முயற்சியில் இருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பினார்

மும்பை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட், கொலை முயற்சியிலிருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பியுள்ளார். கடந்த 15-ந் தேதியன்று மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு நான்கு மணி நேரம் காவல்துறையினர் தாமதமாக சென்றிருந்தால் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் அவரை துப்பாக்கியால் சுட்டிருப்பார்கள். சரியான நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ததால் அவர்களது முயற்சி தவிடுபொடியானது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று முறை அவர்களின் தாக்குதல் இலக்கிலிருந்து மகேஷ் பட் தப்பிய அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு முறை மகேஷ் பட் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவர் காரில் ஏறி சென்றுள்ளதாக அவர்களின் குழுவில் உள்ள ஒருவன் மற்றவர்களுக்கு தெரிவித்தான். இதையடுத்து இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் பட்டின் காரை பின்தொடர்ந்தனர். ஆனால் முதலாம் நபர் தெரிவித்தபடி அந்த காரில் பட் இல்லாததால் தாக்குதல் முயற்சியை கைவிட்டனர். அதே போல் அக்டோபர் மாதமும் மீண்டும் பட்டை கொல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த முயற்சியும் தொல்வியில் முடிந்தது.


இந்த நிலையில் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் நியூ ஜெர்சியில் வசித்து வரும் தொழிலதிபரும், குற்றப்பின்னணி உடையவருமான ஒபெய்த் தனது சகோதரரும், தாதாவுமான முகமது அனிசை தொடர்பு கொண்டு பட்டை கொல்லும் முயற்சி வெற்றி பெறாதது குறித்து சத்தம் போட்டுள்ளார். அதற்கு அனிஸ் கண்டிப்பாக பட்டை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால் குற்றப்பிரிவு போலீசார் இவர்களது தொலைபேசி பேச்சை ஒட்டு கேட்டதால், 13 பேர் கொண்ட கொலைகார கும்பலை கொத்தாக பிடித்துவிட்டனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் பட் உயிர் தப்பினார். தனது உயிரை காப்பாற்றிய மும்பை போலீசாருக்கு பட் நன்றி தெரிவித்தார்.cinema.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக