வியாழன், 27 நவம்பர், 2014

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பிரசவத்திற்கு முன் குழந்தையின் பாலினத்தை அறிவதை தடைசெய்வதால் மாத்திரமே பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதை தடுக்க முடியாது.
மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.அரியானா, டில்லி மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆண், பெண் எண்ணிக்கை விவரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எனவே, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், இந்த மூன்று மாநிலங்களின் சுகாதார அதிகாரிகளுடன், அடுத்த மாதம் 3ம் தேதி கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி, அதில், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, சரியான எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக