வியாழன், 27 நவம்பர், 2014

கலைஞர் : எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னது கிடையாது!

சென்னை: 'எல்லாம் எனக்கு தெரியும் என்று, நான் எப்போதும் சொன்னதும் கிடையாது; நினைத்ததும் கிடையாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர் அளவு தொடர்பாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழகத்தை சேர்ந்த மூத்த இன்ஜினியர்கள் எதிர்பார்க்கின்றனர் என, கூறியிருந்தேன். கேவியட் மனு என்பது, என் சொந்த யோசனை என்று கூட நான் சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது, தனக்கு எல்லாம் தெரிந்ததை போலவும், எனக்கு எதுவும் தெரியாததை போலவும், தன் மேதாவிலாசத்தை பறை சாற்றிக் கொள்வதற்காக, அகந்தைப் பெருக்கோடு, முதல்வர் பன்னீர் அறிக்கை விடுத்திருந்தார். எல்லாம் எனக்கு தெரியும் என, நான் எப்போதும் சொன்னது கிடையாது. அப்படி நினைத்ததும் கூடக் கிடையாது. ஆனால், நான் அறிந்தவற்றை, முழுமையாக, அறிந்து வைத்திருக்கிறேன். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக