சனி, 22 நவம்பர், 2014

சாமியார் ராம்பால் ஆஸ்ரமத்தில் கைக்குண்டுகள் துப்பாக்கிகள் அசிட் போத்தல்கள் சொகுசு மெத்தைகள் .....

அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்தார்.
ஆசிரமத்தையும், தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார். இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன. 2006–ம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகததால் போலீசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். கைதான சாமியார் ராம்பால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நம்மள போல உள்ள  ஆசாமிகளை இன்னுமா உலகம் நம்புது? என்ன பண்றது இன்னும் நெறைய பேரு நம்புறாய்ங்க 

ராம்பால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது சத்வோக் ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 3 ரிவால்வர்கள், 19 ஏர்கன் துப்பாக்கிகள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் ஆயுதங்களும் சிக்கின.
இது தவிர மிளகாய் தூள் நிரப்பிய குண்டுகள், அமிலம் நிரப்பட்ட சிரஞ்சிகள், ஹெல்மெட்டுகள், சைத்தடிகள், 20 ஜோடி கறுப்பு உடைகள், 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டீசல் டேங்க் ஆகியவையும் இருந்தது.
மேலும் ராம்பாலின் படுக்கை அறையையொட்டியுள்ள அறையில் சோதனையிட்ட போது கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மிளகாய் பொடி, மாத்திரைகள், குஷன் மெத்தைகள், ராட்சத மெத்தைகள் போன்றவைகளும் இருந்தன.
மூடப்பட்டிருந்த ஒரு குளியல் அறையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர் மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகரை சேர்ந்த பிஜ்லேஷ் என தெரியவந்தது.
ராம்பாலுடன் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் தங்கி இருந்தார். அவரும் ராம்பாலுடன் கைது செய்யப்பட்டார். எனவே ராம்பாலுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான தொடர்பு பற்றி விசாரணை நடத்துவதற்காக சத்தீஷ்கர் மாநில போலீஸ் உதவியை அரியானா மாநில போலீசார் நாடியுள்ளனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக