சனி, 22 நவம்பர், 2014

தமிழக பாஜகவில் உள்ள அதிமுக உளவாளி யார்? ம்ம் ஒண்ணா ரெண்டா மூணா......

கட்சியில் இருந்தபடி, அ.தி.மு.க.,வுக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்த தலைவர்கள் குறித்து கண்டறியப்பட்டு, மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருப்பதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், 'கிலி'யில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், 2016ல் ஆட்சி அமைக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து, தமிழக பா.ஜ., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'தனித்தே போட்டியிடும் அளவுக்கு, கட்சியை தயார்படுத்துங்கள்' என்றும் சொல்லப்பட்டுஇருக்கிறது. இதை தொடர்ந்து தான், தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசின் தவறுகளை, தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறார். அடுத்தடுத்த கட்டங்களில், தமிழக அரசுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுஇருக்கின்றனர். இந்நிலையில், இலங்கையில் சிக்கிய, ஐந்து தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதில், மோடியின் முயற்சியை, தமிழக மக்கள் மத்தியில், தீவிரமாக கொண்டு செல்ல முயல்கிறது, தமிழக பா.ஜ.,வேறு என்ன காசு பணம் துட்டு மணிமணி
இதனால் தான், இலங்கையில் விடுதலையான மீனவர்களின் வருகை, கடைசி வரை, ரகசியமாக வைக்கப்பட்டது. அதோடு, மீனவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்படாமல், நேரடியாக டில்லிக்கு அழைத்து செல்லப்பட்டதற்கான காரணமும், அது தான். இருந்தபோதும், இப்படி ரகசியமாக வைக்கப்பட்ட எல்லாவற்றையும், சிலர் அ.தி.மு.க., தலைமைக்கு, அவ்வப்போது சொல்லியபடி இருந்தனர். அதனால் தான், டில்லிக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்களை வரவேற்க, பொக்கேயுடன் விமான நிலையம் வந்தார், தமிழக அரசு சிறப்பு பிரதிநிதி ஜக்கையன். இருந்தும் அவரால், அங்கு மீனவர்களை சந்திக்க முடியவில்லை. மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஐந்து மீனவர்களையும், ரகசியமாக யாருக்கும் தெரியாமல், விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று விட்டனர். நடைமுறைகளை முடித்து, இரவு நேரத்தில் தமிழகம் அனுப்பி வைத்தபோதும், ரகசியமாகவே எல்லாவற்றையும் செய்தனர்.

உடனுக்குடன்:

ஆனாலும், மீனவர்கள் தமிழகம் கிளம்புவது அறிந்து, மீண்டும் விமான நிலையம் வந்தார் ஜக்கையன். ரகசியமாக நடந்ததாக சொல்லப்படும் இந்த நிகழ்வுகள் அனைத்தும், அ.தி.மு.க., தரப்புக்கு உடனுக்குடன் எப்படி தெரிய வந்தது என்பது குறித்து, உளவுத் துறையினர் உடனடியாக விசாரித்தனர். தமிழக பா.ஜ.,விலேயே இருக்கும் ஒரு சிலர் தான், மொத்த தகவல்களையும் சேகரித்து, அ.தி.மு.க., தரப்புக்கு சொன்னதாக, பா.ஜ., மேலிடத்துக்கு உளவுத் துறையினர் சொல்லி விட்டனர். இதனால், தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் கலவரம் அடைந்துஇருக்கின்றனர்.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது: பலர், பா.ஜ.,வில் இருந்து கொண்டே, அ.தி.மு.க., ஆதரவாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்; அது கண்டறிப்பட்டு உள்ளது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத பட்சத்தில், அவர்களுக்கு சிக்கல் ஏற்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக