செவ்வாய், 18 நவம்பர், 2014

இசட் பிரிவு பாதுகாப்பு ஒரு சாமியாருக்கு ஏன்? ஒரு சமய தீவிர வாதிகளின் ஆட்சி?

சாமியார்களிடம் பணம் அரசியல் செல்வாக்கு  நண்பிகள் என்று ஆத்மீகம் தவிர மற்ற எல்லாம் தாராளம் .எனவே  இந்த  ஆசாமிகளிடையே  நிச்சயமாக மாபியாபாணி சண்டை இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது.இந்த  இசட் பிரிவு பாதுகாப்பு இதைதான் உறுதி படுத்துகிறது. 
டெல்லி: யோகா குரு ராம்தேவுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் இணைந்தும் தனியாகவும் பல போராட்டங்களை நடத்தியவர் பாபா ராம்தேவ். பாஜகவுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் கருத்துகளை கூறி வந்தார். இந்நிலையில், நேற்று முதல் பாபா ராம்தேவுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த பாதுகாப்பின்கீழ், ராம்தேவுக்கு, ஆயுதம் தாங்கிய 22 பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் காவல் இருக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பு வாகனம் ஒன்றும் ராம்தேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்தால் டெல்லி போலீசாரும், வெளியூர்கள் சென்றால் அந்தந்த மாநில போலீசாரும் இந்த பாதுகாப்பு கவசத்தில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள். இசெட் பிளஸ் என்பதுதான் உச்சகட்ட பாதுகாப்பு வளையம் கொண்டதாகும். பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றோருக்கு இந்த வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது இசெட் ஆகும். இவை இரண்டையும் தவிர, ஒய் மற்றும் எக்ஸ் பிரிவு பாதுகாப்புகளும் தேவைக்கேற்ப வழங்கப்படுவது நடைமுறையிலுள்ளது. பாபா ராம்தேவுக்கு உள்ள பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு இசெட் பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக