திங்கள், 10 நவம்பர், 2014

சசி தரூர் மனைவி மரணத்தில் புதிய ஆதாரங்கள்? தங்கியிருந்த அறையில் மீண்டும் சோதனை?

சசிதரூர் மனைவி சுனந்தாபுஸ்கர் மர்ம சாவு வழக்கு தொடர்பாக அவர் தங்கிய அறையில் போலீஸ் மீண்டும் சோதனை செய்துள்ளது. போலீஸ் புதிய ஆதாரங்கள் சேகரிகரித்துள்ளது. முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தாபுஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டல் அறை எண் 345–ல் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதல் கட்ட விசாரணையில் அவரது மரணத்துக்கு விஷம் அருந்தியது தான் காரணம் என தெரியவந்தது. ஆனாலும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலை நீடித்து வருகிறது.


இந்த நிலையில் சுனந்தாபுஸ்கர் மரணம் அடைந்த அறையில் போலீசார் மீண்டும் திறந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த அறையில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகள், கட்டில் மெத்தையில் உறைந்து கிடந்த பொருள் உள்ளிட்ட பல்வேறு புதிய ஆதாரங்களை கண்டுபிடித்து அவற்றை மருத்துவ ஆய்வுக்காக அனுப்பிவைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசாரிடம் நிருபர்கள் சம்பவம் நடந்த இத்தனை நாளுக்கு பிறகு புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே, அப்போது அவற்றை சேகரிக்கவில்லையா? என கேட்டனர். அதற்கு போலீஸ் அதிகாரி அந்த அறை சம்பவத்துக்கு பின்னர் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தான் மீண்டும் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்தன என்று கூறினார். ஆனாலும் முன்பு போலவே அவரது மரணத்துக்கு விஷம் தான் காரணம் என்றும், இதுபற்றி விரிவாக விளக்க முடியாது என்றும் அவர் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக