சனி, 29 நவம்பர், 2014

பூமிகா நடித்த களவாடிய பொழுதுகள்! தங்கரின் பொழுதுகளை களவாடியவர்கள் யார் யாரோ?

ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் நடித்த பூமிகா தனது பாய்பிரண்ட் பரத் தாகூரை 2007ல் மணந்தார். ஆனாலும் நடிப்புக்கு ஓய்வு கொடுக்காமல் தெலுங்கு. பஞ்சாபி, மலையாளம், போஜ்புரி என வெவ்வேறு மொழிகளில் நடித்துவந்தார். தமிழில் இவர் நடித்திருக்கும் ‘களவாடிய பொழுதுகள்‘ திரைக்கு வராமல் பெட்டியிலேயே முடங்கிக்கிடக்கிறது. இதற்கிடையில் அவரை தமிழில் நடிக்கவைக்க சில இயக்குனர்கள் அணுகியபோது பென்டிங்ல இருக்கற படம் ரிலீஸ் ஆகட்டும் அதுக்கப்பறம் தமிழில் நடிப்பதுபற்றி பார்க்கலாம் என்று கடுப்படிக்கிறாராம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்களுக்கு மட்டும் கால்ஷீட்டில் தாராளம் காட்டுகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த ‘லட்டுபாபு‘ ரிலீஸ் ஆனது. இதையடுத்து கன்னடத்தில் புதிய படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மாடர்ன் காலத்து மனைவியாக நடிக்கும் அவருக்கும் கணவருக்கும் இடையே நடக்கும் லடாய் படத்தின் முக்கிய அம்சமாம். - See more tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக