ஞாயிறு, 16 நவம்பர், 2014

ரெஜினா:கவர்ச்சியாக என்னாலும் நடிக்க முடியும்! சக ஹீரோயின்களுக்கு சவால்?

கவர்ச்சியாக நடிப்பேன் என்றதால் சர்ச்சையில் சிக்கினார் ரெஜினா.கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தற்போது ‘ராஜதந்திரம்' என்ற தமிழ் படத்தில் மட்டும் நடிக்கிறார். தெலுங்கில் 3 படங்கள் நடிக்கிறார்.  திரைக்கு வந்த ஆரம்ப காலங்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. முற்றிலுமாக பட வாய்ப்பு கைநழுவிப்போய்விடுமோ என்று பயந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு கவர்ச்சியாக என்னாலும் நடிக்க முடியும் என்று சக ஹீரோயின்களுக்கு சவால் விடுவதுபோல் தெரிவித்ததுடன் கவர்ச்சி ஹீரோயின் வேடங்களையும் ஏற்றார். அவரது அறிவிப்பு திடீர் தலைவலியை அவருக்கு ஏற்படுத்திவிட்டது. கவர்ச்சியாக நடிக்கும் நீங்கள் அதற்கான எல்லையை வகுத்து வைத்திருக்கிறீர்களா? என்றும், திடீரென்று கவர்ச்சிக்கு மாறியது ஏன்? கவர்ச்சி காட்டாவிட்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காதா என்று அவரது ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர். கடுப்பான ரெஜினா,‘வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நடிகையாக வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. கடவுள் அருளால் நடிகை ஆனேன். சில நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்ததில் சந்தோஷம்.
நான் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே இப்போது ஒப்புக்கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் கவர்ச்சி என்பது நான் ஏற்கும் வேடத்தின் ஒருபகுதிதான். என்னுடைய நடிப்பை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்' என்று கோபப்பட்டார். - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக