செவ்வாய், 25 நவம்பர், 2014

மோடியின் மனைவி யசோதா: போலீசாரால் என் உயிருக்கு ஆபத்து? தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மோடியின் வாழ்க்கை அம்பலம்?

மெக்சனா:'எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்...? எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?' என, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். அதேநேரத்தில், 'முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது போல, எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்' என்றும், அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தன் சகோதரர் அசோக் மோடியுடன், மெக்சனா மாவட்டம், உஞ்ஜா நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த யசோதா பென், தற்போது, குஜராத் மெக்சனா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மொதாலியாவிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மோடியின் இருண்ட கால லீலைகள் கௌதம் அதானிக்கும் தெரியும், யசோதா பெஹன் க்கும் தெரியும்.. ஒருத்தர் பயமுறுத்தி சம்பாதிக்க பலமாக ஒட்டிக்கிட்டார்.. மானமுள்ள யசோதா பெஹன் அவரை வெட்டி விட்டார்..


தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், அவர் கோரியுள்ள விவரம்:பிரதமரின் மனைவி என்ற முறையில், எனக்கு உள்ள உரிமைகள் என்ன?எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? எந்த அடிப்படையில், பாதுகாப்பு வழங்கப்படுகிறது? இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிகளின் கீழ், பிரதமரின் மனைவிக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது?எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார், நான் பஸ்சில் பயணம் செய்தால் கூட, காரில் பின் தொடர்கின்றனர். இது, எனக்கு அதிருப்தி அளிப்பதாக உள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோல, எனக்கு பாதுகாப்பு தரும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என, அஞ்சுகிறேன். எனவே, என் வீட்டிற்கு பாதுகாப்புக்கு வரும் ஒவ்வொரு போலீசாரிடமும், அவர்கள் பாதுகாவல் பணியில் ஈடுபடுவதற்காக, பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் இருக்க வேண்டும். அவர்கள் அந்த நகலை வைத்திருக்கும்படி, அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் அவர் கோரியுள்ளார்.

இதுபற்றி, போலீஸ் கண்காணிப்பாளர் மொதாலியா கூறியதாவது:யசோதா பென், இன்று, என் அலுவலகத்திற்கு வந்தார். போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுவதால், பிரதமரின் மனைவி என்ற முறையில், தனக்குள்ள உரிமைகள் என்ன என, கேள்வி எழுப்பி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நாங்கள் பதில் அளிப்போம்.இவ்வாறு, மொதாலியா கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக