திங்கள், 24 நவம்பர், 2014

ஸ்மிருதி ராணி ஜனாதிபதி ஆவார்! ஜோதிடர் கணிப்பு ! பில்லி சூனியம் யாகம் போன்றவைதான் இனி அரசியல்??/

ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்வீர்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் கூறியுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோதிடர். ஜோதிடரின் இந்த கணிப்பு பாஜக தலைவர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்மிருதி ராணி சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். 12ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு, 2000ம் ஆண்டு துவக்கத்தில் விளம்பர மாடலாக களமிறங்கினார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், 2003ல் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டபோது, தான் ஒரு பிஏ பட்டதாரி என்று கூறிய அவர், 2014ல் நடந்த நாடமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபோது, பி.காம். படித்திருந்ததாக விண்ணப்பத்தில் தெரிவித்திருந்ததால் சர்ச்சையில் சிக்கினார்.தேர்தல் சமயத்தில் அவர் ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்கு சென்று, அங்கு பண்டிட் நாதுலால் வியாஸ் என்ற ஜோதிடரை சந்தித்து வெற்றி வாய்ப்பு குறித்து ஜாதகம் பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், மிக பிரபலமான பதவி உங்களுக்கு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியிடம் தோல்வி அடைந்ததால், ஜோதிடர் கணிப்பு பொய்யானது என்று கருதிய நேரத்தில், ஸ்மிருதி ராணிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவியை அளித்து ஆச்சரித்தில் ஆழ்த்தினார் பிரதமர்
நரேந்திர மோடி. இதனால் ஜோதிடர் பண்டிட் நாதுலால் வியாஸ் வாக்கை தெய்வ வாக்காக கருத தொடங்கினார் ஸ்மிருதி ராணி.இந்தநிலையில் தான், தன்னுடைய வருங்காலம் எப்படி இருக்கும் என்று அறிய ஜோதிடர் பண்டிட் நாதுலால் வியாசை திங்கள்கிழமை அவர் மீண்டும் சந்தித்தார். அவரது ஜாதகத்தை 4 மணி நேரம் கணித்த ஜோதிடர், ஸ்மிருதி ராணி இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவார் என்று கூறியதாக தெரிகிறது.பாஜகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க ஸ்மிருதி ராணி எப்படி குடியரசுத் தலைவராக முடியும் என்ற வாதம் ஒருபுறம் இருக்க, ஒரு மத்திய அமைச்சர் 4 மணி நேரம் ஒரு ஜோதிடர் வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.">இந்த சந்திப்பு குறித்து ஸ்மிருதியிடம் டிவி செய்தியாளர்கள் சிலர் கேட்டபோது, இன்று உங்களுக்கு நல்ல டிஆர்பி கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிரித்தபடி கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து மீடியாக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம், உங்களது தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து என்னை வைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன் என்றார். 

ஆனால் இதே ஜோதிடர் வியாஸ்தான் முன்பு இராணிக்கு சிறந்த எதிர்காலம் இல்லை என்றும் கணித்தவர் ஆவார். இருப்பினும் பின்னர் இவரே இராணியை அழைத்து நல்ல எதிர்காலம் உள்ளது, மத்தியில் அமைச்சர் ஆவாய் என்றும் வாழ்த்தினார். திங்கள்கிழமையின் சந்திப்பின்போது இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு நாள் வருவாய் என்று வாழ்த்தினாராம் வியாஸ். 

இராணியின் இந்த ஜோதிடர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனாவின் சஞ்சய் ராத் கூறுகையில், ஜோதிடம் என்பது சாஸ்திரம். யார் வேண்டுமானாலும் அதை நம்பலாம், பின்பற்றலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அதில் குறை கண்டுபிடிக்கவும் தேவையில்லை என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக