வியாழன், 20 நவம்பர், 2014

குஜராத் கலவரங்களுக்கு மோடி பொறுப்பல்ல: நானாவதி கமிஷன்

ஆமதாபாத்: குஜராத் மத கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஜி.டி.நானாவதி அளித்துள்ள அறிக்கையில், 'மத கலவரங்களுக்கும், மோடி அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில், 2002ம் ஆண்டில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல நாட்கள் பயங்கர கலவரம் நடைபெற்றது. அங்குள்ள கோத்ரா ரயில் நிலையத்தில், கரசேவகர்கள் ரயில் பெட்டியில், உயிருடன் எரித்து கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு கலவரம் மூண்டது.அது குறித்து விசாரிக்க, நீதிபதி, ஜி.டி.நானாவதி தலைமையில், இரு நீதிபதிகள் கமிட்டியை மாநில அரசு, 2002ல் அமைத்தது. 12 ஆண்டுகளாக விசாரணை நடத்திய அந்த கமிட்டி, நேற்று முன்தினம் இறுதி அறிக்கையை, முதல்வர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது.ரொம்ப ரொம்ப எதிர்பார்த்ததுதான்! இனி நானாவதி கவர்னர் ஆவாரா அல்லது வேறு எந்த ...


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் முக்கிய அம்சங்களாவன:
*குஜராத் கலவரத்திற்கும், அப்போதைய முதல்வர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
*எந்த விதத்திலும், மோடி அரசு, கலவரங்களில் தொடர்பு கொள்ளவில்லை.
*கலவரம் நடைபெற்ற இடங்களில் இருந்த, வி.எச்.பி., மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளின் நிர்வாகிகள் சிலர் மீது அப்போதைய மோடி அரசு நடவடிக்கை எடுத்தது.
*கலவரக்காரர்களை கட்டுப்படுத்த, சரியான நேரத்தில் ராணுவத்தை மோடி அரசு வரவேற்றது.
*மோடி மீதான குற்றங்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் தான், அவரை விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை.
*கலவரம் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் தான் கலவரம் பரவியது.இவ்வாறு அந்த அறிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக