ஞாயிறு, 9 நவம்பர், 2014

கலைஞரை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சந்தித்தார்! மூத்த சுயமரியாதைகாரர் என்ற வகையில் ...

Few days after taking over as the president of Tamil Nadu Congress Committee (TNCC), EVKS Elangovan on Sunday met DMK chief M. Karunanidhi at his Gopalapuram residence.
Talking to the reporters, Mr. Elangovan said that the meeting was primarily to seek the DMK patriarch’s wishes since he was beyond politics in Tamil Nadu.
To a query on whether there were any talks on possible alliance, he said it would be discussed by senior leaders Sonia Gandhi and Mr. Karunanidhi.
கலைஞரை சந்தித்தது திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் இன்று தி.மு.க. தலைவர் கலைஞரை அவரது சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்புக்கான காரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘ தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி கலைஞர்.   அவர் குடும்பத்தின் பெரியவர் போல.  தி.மு.க. தலைவர் கலைஞர் அரசியல் எல்லைகளை கடந்த தமிழகத் தலைவர் என்பதால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதையடுத்து, அவரை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன்’ என்றார்.இந்த சந்திப்பு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா? என்ற கேள்விக்கு, ’கூட்டணி தொடர்பாக நான் முடிவெடுக்க முடியாது.  இருகட்சி தலைவர்களான சோனியா காந்தியும், கருணாநிதியும் முடிவெடுப்பார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக