ஞாயிறு, 16 நவம்பர், 2014

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 5 குழந்தைகள் சாவு!

 தர்மபுரி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 சிசுக்கள் உள்பட 5  குழந்தைகள் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இறந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்குபேட்டர்  கோளாறு, மருத்துவர்களின் அலட்சிய போக்கால் குழ ந்தைகள் இறந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் புறநோயாளிகள், ஆயிரம்  உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை  பெறுகின்றனர். அதிமுக அமைச்சர்களும் அடிவருடிகளும் முழுக்க முழுக்க கோவில்களில்அம்மாவுக்காக பூஜை யாகம் ஹோமம் மண்சோறு காவடி போன்ற நாட்டுக்கு தேவையான விடயங்களில் full time  ஈடுபடுராய்ங்க ! இவிங்க  பேசாம அதிமுகவை  ஒரு  அம்மா பக்தி இயக்கமாக மாத்திடலாம் .  இந்துசமய பூஜை  புனஸ்கார ADMK ன்னு ஒரு  NGOவாக  மாத்திடலாம்?ஆட்சின்னா  கொஞ்சம் நாட்டு  நிர்வாகத்தையும்  கவனிக்கனும்ல?
இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டு உள்ளது. இங்கு பிரசவத்தில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பிறக்கும்போது மூச்சிரைப்பு, பிறப்பிலேயே மஞ்சள் காமாலை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியை சேர்ந்த  குமுதாவின்ஆண்  குழந்தை, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பூர்ணிமாவின்  பெண் குழந்தை,  அரூர் கோபிநாதம்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தி என்பவரது பெண் குழந்தை,  திருப்பத்தூரை  சேர்ந்த ஷோபனாவின், பெண் குழந்தை தர்மபுரி யை சேர்ந்த  பழனியம்மாளின்  பெண் குழந்தை ஆகிய 5 பச்சிளம் குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்தன. இறந்த குழந்தைகளின் பெற்றோரிடம், இயற்கையான மரணம்தான் என்று ஒப்புதல் கையெழுத்து மட்டும் மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக்கொண் டது. இரவோடு  இரவாக குழந்தைகளை உடனடியாக அடக்கம் செய்து  விடுங்கள் எனக்கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்த  தகவலும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த குழந்தைகள்  இறந்தபோதிலும் ஒரு சம்பவம் மற்றொருவ ருக்கு தெரியாத  வகையில் ரகசியமாக அனைவரை யும் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்ததகவலும் அம்பலமாகியுள்ளது.

பெற்றோர் குற்றச்சாட்டு: அடுத்தடுத்து 5 குழந்தைகள்  இறந்த சம்பவம் நேற்று பகலில் வெளியானது. இதை  கேள்விப்பட்டு இறந்த குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டு  தங்களை ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன் (26). கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சசிகலா (24). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் குழந்தை உள்ள நிலையில், 2வது  முறையாக கர்ப்பமான சசிகலா, கடந்த 11ம் தேதி,  தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, 13ம்  தேதி மாலை குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு  திடீரென இறந்தது. இந்நிலையில், ஒரே நாளில் 5 குழந்தைகள் இறந்ததை கேள்விப்பட்ட முருகன்,  அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது முருகன்  கூறியதாவது: என் மனைவி சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தை, 2  கிலோ 600 கிராம் எடையுடன் நன்றாக, ஆரோக்கியமாக  இருந்தது. ஆனால் 2 நாட்களுக்கு பிறகு மூச்சு விடுவதில்  சிரமமாக இருந்ததால் எனது குழந்தை இறந்து விட்டது  என டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது இதே க £ரணத்திற்காக, ஒரே நாளில் 5 குழந்தைகள் உயிரிழ ந்திருப்பது மருத்துவர்களின் சிகிச்சையில் சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்களின் கவனக்குறைவால் தான் இது போன்ற  உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. எடை குறைவாக இருந்தத £ல் தான் குழந்தைகள் உயிரிழந்தது என்பது நம்பும்படிய £க இல்லை. எனவே, குழந்தைகள் இறந்ததற்கு காரணம்  மருத்துவர்களின் அலட்சியமா அல்லது இன்குபேட்டர் கோளாறா என்பதை கண்டறிய, சுகாதாரத்துறை விரிவான  விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை டீன் விளக்கம்: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன்  (பொ) இளங்கோவன் கூறியதாவது: பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம், இந்தியாவிலேயே  தமிழகத்தில் தான் மிக குறைவு. ஆயிரம் குழந்தைகளுக்கு  21 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில், ஆயிரம் குழந்தைகளுக்கு 17  குழந்தைகள் என்ற அளவில் தான் மரணம் ஏற்படுகிறது.  தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு பொறுப்பு  டாக்டர் தலைமையில் 2 குழந்தைகளுக்கு ஒரு நர்ஸ் வீதம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று  வந்த குழந்தைகளில் 5 குழந்தைகள் இறந்துள்ளன. இதில்  3 குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவை. மற்ற 2  இரண்டு குழந்தைகள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் இருந்து இங்கு  பாதிப்புடனும், எடை குறைபாடுடனும், மோசமான  நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகும்.  இயற்கைக்கு எதிராக நாம் போராட முடியாது. இந்த குழந்தைகளை காப்பாற்ற முடியாதற்கு மருத்துவ குறைபாடுகளோ, அல்லது வசதி இன்மையோ காரணம் இல்லை.  ஒரே நேரத்தில் 5 குழந்தைகள் இறந்துள்ளன. மருத்துவ குறைபாடால் எந்த குழந்தையும் இறக்கவில்லை என  கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள்  நல குழுமம் விசாரணை:  தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் ரவி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு  நேற்று நேரில் சென்று பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு சென்றார். அங்கு குழந்தைகள் வார்டை உறுப்பினர் ரவி பார்வையிட்டார்.  இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் ரவி கூறியதாவது: தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் இறந்துள்ளன. 18 வயது வரை குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தால் அங்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவோம்.  தர்மபுரியில் 5 குழந்தைகள் இறந்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை கூட்டுவோம். இந்த கூட்டத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோரிடமும், நர்சுகள், டாக்டர்களிடம் விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் ரவி கூறினார்.

தாசில்தார் விசாரணை

தர்மபுரியில் நேற்று முன்தினம்  5 குழந்தைகள் இறந்தன. இது குறித்து, ம £வட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், தர்மபுரி தாசில்த £ர் பாரதி தலைமையில் துணை தாசில்தார் ஜெயலட்சுமி  மற்றும் அலுவலர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு  நேரில் சென்று விசாரணை நடத்தினர். அரசு  மருத்துவமனை டீன்(பொ) டாக்டர் இளங்கோவன்,  ஆர்எம்ஓ சுரபி, டாக்டர் புகழேந்தி ராஜா ஆகியோர் விள க்கம் அளித்தனர். இதுகுறித்து தாசில்தார் பாரதி கூறுகையில், தர்மபுரி அரசு  மருத்துவமனையில் ஒரே நாளில் 5 குழந்தைகள் இறந்தது  தொடர்பாக அறிக்கை அனுப்புவதற்காக கலெக்டர்  உத்தரவின் பேரில், டாக்டர்களிடம் விசாரணை நடத்தினே £ம். விசாரணை குறித்த தகவல்களை அறிக்கையாக தய £ரித்து, கலெக்டரிடம் வழங்கப்படும் என்றார்.

ஐந்தரை மணி நேரத்தில்....

தர்மபுரி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை 5 முதல் இரவு 10.30 மணி வரை ஐந்தரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலியான விவரம்:  நவ. 14 மாலை 5 மணி: தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியை சேர்ந்த  குமுதாவுக்கு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, கடந்த 12ம் தேதி தர்மபுரி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. நேற்று முன்தினம்  மாலை 5 மணிக்கு குமுதாவின் ஆண் குழந்தை இறந்தது.
மாலை 6.00 மணி: பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பூர்ணிமாவுக்கு பிறந்த பெண் குழந்தை, 12ம் தேதி இரவு 8.15  மணிக்கு சேர்க்கப்பட்டு, 14ம் தேதி  மாலை 6 மணிக்கு இறந்தது.

இரவு 9.30 மணி: அதே போல், அரூர் கோபிநாதம்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தி என்பவரது பெண் குழந்தை, கடந்த 3ம் தேதி  தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.  இந்த குழந்தை நேற்று முன்தினம் இரவு 9.30  மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தது. இரவு 10 மணி: திருப்பத்தூரை  சேர்ந்த ஷோபனாவுக்கு, கடந்த 12ம் தேதி தர்மபுரி அரசு  மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுவாச கே £ளாறுடன் பிறந்ததாக கூறப்படும் இந்த குழந்தை, நேற்று  முன்தினம்  இரவு 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி இற ந்தது. இரவு 10.30 மணி: தர்மபுரி மாவட்டம் பழனியம்மாளுக்கு, கடந்த 13ம் தேதி  தர்மபுரி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணிக்கு  பெண் குழந்தை பிறந்தது. பச்சிளங்குழந்தைகள் வார்டில்  இருந்த இந்த குழந்தை, நேற்று முன்தினம்  இரவு 10.30 மணிக்கு இறந்தது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக