சன் டிவி தொகுப்பாளினி அழகு ஐஸ்வர்யா சத்தமில்லாமல் ரிஜிஸ்டர்
திருமணம் செய்து கொண்டுள்ளார். அதே சூட்டோடு சூட்டாக தலை தீபாவளியும்
கொண்டாடி விட்டாராம்.
மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால் விசாவிற்காக திருமணம் நடைபெற்றதாகவும்
ஊடகங்களுக்கும், சொந்தங்களுக்கும் சொல்லி பிப்ரவரியில் மீண்டும் ஊர் அறிய
திருமணம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா கைபிடித்துள்ள மாப்பிள்ளையின் பெயர் ப்ரனேஷ். பிறந்தது
மும்பை என்றாலும் சென்னையில்தான் வசிக்கின்றனராம். நிச்சயம், ரிஜிஸ்டர்
திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை அமெரிக்கா சென்று விட்டாராம்.
மகாபாரதம் தொடரில் திரௌபதியாக நடித்த ஐஸ்வர்யா அதிலிருந்து விலகிய
கையோடு தொகுப்பாளினி வேலைக்கும் சில காலம் பிரேக் விட்டிருந்தார். தற்போது
சின்ன கேப்பில் மீண்டும் சன் சிங்கர் தொகுக்க வந்துள்ளார். கணவருடன் டெய்லி
சாட்டிங்கில் லவ் பண்ணுகிறாராம்.
ஐஸ்வர்யாவிற்கு அழகான வாட்ச் ஒன்றை பரிசளித்தாராம் கணவர் ப்ரனேஷ்.
இந்த ஆண்டு தனியாக தலை தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா அடுத்த ஆண்டு கணவருடன்
சேர்ந்து கொண்டாடும் போது பெரிய பரிசு ஒன்றை கொடுக்கப் போகிறாராம்.
tamil.filmibeat.com
tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக