திங்கள், 6 அக்டோபர், 2014

Sagayam IAS ! 24 ஆண்டு பணி காலத்தில் 23 முறை பணியிட மாற்றம் ! ஊழலை ஒழிக்க முயன்றதால் ......

சென்னை: ஊழலை ஒழிக்க முயன்றதற்காக என் 24 ஆண்டு பணி காலத்தில் 23 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார். காந்திய பண்பாட்டு நலச்சங்க 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வியாசர்பாடியில் மது ஒழிப்பு பேரணி நடந்தது. அம்பேத்கர் கல்லூரி அருகில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தொடங்கி வைத்தார். இதில், போலீஸ் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், சகாயம் ஐஏஎஸ், சங்க தலைவர் முருகன், பொதுச் செயலாளர் மாரிமுத்து, ஜோதிராம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசுகையில், ‘‘காந்தியின் அகிம்சை கொள்கையை சிறுவயதிலேயே மாணவ, மாணவியர்களுக்கு புகட்டுவதின் மூலம் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக வரும்போது அந்த கொள்கையை கடைபிடிப்பார்கள். நான் 24 ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்து வருகிறேன். பணியின் போது 23 முறை இடமாற்றம் செய்யப்பட்டேன். ஊழலை ஒழிக்க இதுநாள் வரை பாடுபட்டு வருகிறேன். மது குடிப்பதின் மூலம் இளைஞர்கள் கெட்டுப்போவதை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இளைஞர்கள் புதிய சமூகம், புதிய தேசம் என்ற உறுதிமொழியை ஏற்று செயல்படவேண்டும் என்றார். தினகரன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக