திங்கள், 6 அக்டோபர், 2014

பாடகர் யேசுதாசின் இரட்டை வேஷம்! இரட்டை வாழ்க்கை ! அமெரிக்காவில் பாதி கேரளாவில் பாதி !

பாடகர் யேசுதாஸ் பக்கா காரியவாதி. அமெரிக்காவில் தனது சொத்து க்களை சேர்த்து சொந்தமாக பெரிய வீடு வாங்கி அதுவும் விலை கூடிய புளோரிடா மாநிலத்தில் ! முழுக்க முழுக்க கேரளா மத்திய அரசுகளின்  பட்டங்கள் மட்டுமல்ல சிறப்பு சலுகைகள் பலவற்றையும் கார் உட்பட வாங்கி கொண்டு பலவிதமான வியாபரங்களிலும்  முதலிட்டு கொண்டு வாழும் ஒரு சங்கீத வியாபாரி . அது அவரது திறமை . அடிக்கடி மனிதவாழ்வு பற்றி எல்லாம் வகுப்பு எடுப்பது அவரது இமேஜ் பில்டிங் டெக்னிக் , அது பற்றி கூட நாம் அலட்டிக்கொள்ளவில்லை. தனது இமேஜை உயர்த்திக்கொள்ள  தற்போது பெண்களின் ஆடைகளால் தனது ஆண் வர்க்கத்திற்கு  மனக்கிளர்ச்சி உண்டாகிறது என்று திருவாய் மலர்ந்தருளி உள்ளது அருவருப்பாக இருக்கிறது, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் வக்கிர புத்தி ஆண்கள் இப்படிதான் பேசுகிறார்கள். போனால் போகட்டும் வயோதிப காலத்தில் வாய் தடுமாறி சொல்கிறார் என்று கவனிக்காமல் விட்டால் கலாசார காவலர்கள் இதையே முன் உதாரணமாக கொண்டு தங்கள் பாரம்பரிய  பெண் அடிமை புத்தியை காட்ட தொடங்கி விடுவார்கள்  .அதனால் இந்த முறை தாஸ் சேட்டனை ஒரு கை பார்த்து விடுவது என்று கேரளா மகளிர் பாதுகாப்பு அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இந்த படு சுயநல வாதி சங்கீதத்தில் தனது வாரிசு என்று யாரையும் இவர் உருவாக்கியதில்லை. அதற்கு மனம் இல்லை. இவரை நெருங்கவே முடியாது. இருந்தால் ரேட்டு எழுந்தால் ரேட்டு என்று காசுக்காக அலையும் வியாபாரி இவர். . அவரது மூன்று மகன்மாரும் அமெரிக்க கலாசாரத்தில் ஊறி சங்கீத வியாபாரத்தை  கொண்டு நடத்த கூடிய தகுதியை வளர்த்துகொள்ளவில்லை..ஊருக்கு உபேதசம் செய்யும் இந்த சங்கீத வியாபாரி முதல்ல அதை தன்வீட்டில் வைத்து ஆரம்பிக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக