ஞாயிறு, 12 அக்டோபர், 2014

மதவாதத்துக்கு நெத்தி அடி - மலாலாவுக்கு நோபல் பரிசு! Malala : the pride of Pakistan, but she can't go home !

சம்பவத்தன்று நான் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை மறித்து, உங்களில் யார் மலாலா எனக் கேட்டார்.
யாரும் வாயைத் திறந்து பதில் சொல்லாத போதும், சில சிறுமிகள் மட்டும் என்னை தலையை திரும்பி பார்த் தார்கள். அத்தோடு, அந்த மாணவிகள் கூட்டத்தி லேயே நான் மட்டும் தான் முகத்திற்கு முக்காடி டாமல் இருந்தேன். உடனடியாக தன் கையில் இருந்த பிஸ்டலை உயர்த் தினார்
அந்த மனிதர். வண்டிகளில் இருந்த மாணவிகளில் சிலர் பயத்தில் கத்தினார்கள். நான் எனது அருகில் இருந்த தோழியின் கை களைப் பிடித்து பிசைந்த தாக எனது தோழி பின்னர் தெரிவித்தார். மேலும், என்னை நோக்கி அந்த நபர் மூன்று முறை சுட்டதாகவும் எனது தோழிகள் தெரிவித்தனர்.
காதில் ரத்தம் வடிய நான் அருகில் இருந்த தோழி மீது சாய்ந்தேன்.அடுத்து வந்த சில குண்டுகள் அரு கில் இருந்த சிறுமிகள் மீது பட்டதாகவும், என்னைச் சுடும் போது துப்பாக்கி ஏந்தியவரின் கைகள் நடுங்கியதாகவும் தோழிகள் தெரிவித்தனர்.'
நார்வே, அக்.11-_ பழமைவாதிகளை எதிர்த்து பெண் கல்விக்காக பாடு பட்ட சிறுமி மலாலா வுக்கும், குழந்தைகள் நல உரிமைக்காகப் பாடுபட்ட கைலாஷ் சத்யார்த்தி ஆகி யோருக்கு உலகத்தின் மிக உயரிய வெகுமதியான அனுமதிக்கான நோபல் பரிசு இணைந்தளிக்கப் படுகிறது.
மலாலாவின் பிறந்த இடம் ஸ்வாத் பள்ளத் தாக்குப் பகுதியில் அமைந்த மிங்கோரா வாகும். ஸ்வாத் என்பது பார்சிமொழியில் சுவை என்று பொருள். ஸ்வாத் பள்ளத்தாக்கில் விளை யும் பாசுமதி அரிசி மிக வும் சுவை மிகுந்தது. இந்த அரிசியின் சுவையின் பெய ரால் இப்பகுதி ஸ்வாத் என்று பெயர் பெற்றது.    1990 களுக்குப் பிறகு தாலிபான்களின் ஆதிக் கம் பெற்ற பிறகு இப்பகுதி உலகின் பார்வையில் இருந்து மறைந்து விட் டது.
தாலிபான்கள் பழமைவாதிகளாகையால் இங்கு கல்வி என்பது பெண்களுக்குத் தடை செய்யப்பட்டன. பொழுது போக்குச் சாதனம், மற்றும் பத்திரிகைகள் என அனைத் தும் தடைசெய்யப்பட்டது. பாகிஸ்தானில் ஜனநாய கம் பேருக்குத்தான் இருந் ததே தவிர அங்கு உள்ள எல்லா மாநிலங்களிலும் பழமைவாதிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்தது.    தடையை உடைத்த மலாலா     பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலுள்ள ஸ்வாட் பகுதியின் மிங் கோரா என்னும் ஊரில் பிறந்தவர். மலாலா யூசுப் சாயின் தந்தை  கவிஞர் ஜியாவுதீன் யூசுப்சாய் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்   தனது தந்தை யின் உதவியுடன்  உருது மொழியில் பிபிசி இணைய தளத்தில் பாகிஸ்தானில் பெண்குழந்தைகள் கல்வி பற்றி தொடர்ந்து எழுதி வந்தார் அவ்விணைய தளத்தில்  இருந்து ஒரு பகுதி:
நேற்றிரவு இராணுவ ஹெலிகாப்டர்களும், தாலிபான்களும் நிறைந்த ஒரு கொடுமையான கனவு கண்டேன். ஸ்வாட் பள் ளத்தாக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடங் கிய காலத்திலிருந்து இப்படி கனவுகள் எனக்கு வருகின்றன. அம்மா செய்துவைத்த காலை உணவை முடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினேன். பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு தாலிபான் கள் தடை விதித்திருப் பதால் எனக்கு பள்ளிக் குச் செல்ல பயம் இருந் தது. 27 பேரில் 13 பேர் தான் பள்ளிக்கு வந்திருந் தனர்.
தாலிபான்களின் தடையால் மாணவர் களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்திருக்கிறது. இந்தத் தடைக்குப் பின் னர் எனது மூன்று தோழி கள் தங்கள் குடும்பத் துடன் பெஷாவருக்கும், லாகூருக்கும் ராவல்பிண் டிக்கும் குடிபெயர்ந்து விட்டார்கள்.
வீட்டிலி ருந்து பள்ளிக்குச் செல் லும் வழியில், உன்னைக் கொன்றுவிடுவேன் என்று ஒருவர் கத்தும் குரல் கேட்டது. நான் எனது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு, பின்னால் அவர் என்னைத் தொடர் கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் நிம்மதியளிக் கும் விதமாக, அவர் யாருடனோ செல்பேசி யில் பேசி, அவரை மிரட் டிக் கொண்டிருந்தார். இப்படித் தொடங்குகிறது மலாலாவின் இணைய தளப்பதிவு. இவரது பதிவு உலகம் முழுவதும் மிகவும் பிரபல மடைந்தது. பாகிஸ்தானி லும் பெண் கல்விக்கான குரல் எழும்பத்துவங்கியது. பாகிஸ்தானின் பெண் குழந்தைகளின் கல்வி பற்றி எழுதியமைக்காக இவர் அக்டோபர் 8 2012 அன்று பழமைவாதிகளால் சுடப்பட்டார். தாலிபான் பழமைவாதி களால் சுடப் பட்ட மலாலா தனது சுய சரிதையில் எழுதியதாவது, சம்பவத்தன்று நான் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை மறித்து, உங்களில் யார் மலாலா எனக் கேட்டார்.
யாரும் வாயைத் திறந்து பதில் சொல்லாத போதும், சில சிறுமிகள் மட்டும் என்னை தலையை திரும்பி பார்த் தார்கள். அத்தோடு, அந்த மாணவிகள் கூட்டத்தி லேயே நான் மட்டும் தான் முகத்திற்கு முக்காடி டாமல் இருந்தேன். உடனடியாக தன் கையில் இருந்த பிஸ்டலை உயர்த் தினார்
அந்த மனிதர். வண்டிகளில் இருந்த மாணவிகளில் சிலர் பயத்தில் கத்தினார்கள். நான் எனது அருகில் இருந்த தோழியின் கை களைப் பிடித்து பிசைந்த தாக எனது தோழி பின்னர் தெரிவித்தார். மேலும், என்னை நோக்கி அந்த நபர் மூன்று முறை சுட்டதாகவும் எனது தோழிகள் தெரிவித்தனர்.
காதில் ரத்தம் வடிய நான் அருகில் இருந்த தோழி மீது சாய்ந்தேன்.அடுத்து வந்த சில குண்டுகள் அரு கில் இருந்த சிறுமிகள் மீது பட்டதாகவும், என்னைச் சுடும் போது துப்பாக்கி ஏந்தியவரின் கைகள் நடுங்கியதாகவும் தோழிகள் தெரிவித்தனர்.'
14 வயது சிறுமியை துப்பாக்கியால் கொல்லத் துணிந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சிய டையச் செய்தது,  அக் டோபர் 8 ஆம் தேதி சுடப்பட்ட சம்பவம் மறுநாள் அதிகாலை உலகப் பத்திரிகைகளின் தலைப்புச்செய்தியானது.
முதலுதவிக்குப் பிறகு லண்டனில் உள்ள விக் டோரியா மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைய ளிக்கப்பட்டது.  சுமார் 3 மாத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர் இனி பெண் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடுவதே என்னுடைய முக்கிய குறிக் கோள் என்று உலகம் முழு வதும் பெண்குழந்தைக் கல்விக்காக பிரச்சாரம் செய்தார்.
2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆம் பிறந்தநாள் அன்று அய்க்கிய நாடுகள் சபையைத் தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வை அய்க்கிய நாடுகள் " மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும். அதே ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இறுதியில் 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யாத்திரி யுடன் இணைந்து பெறுகிறார்.
கைலாஷ் சத்யார்த்தி
குழந்தைகள் நலஉரிமைகளுக்காக பல்வேறு அமைதி வழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளதாக நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப் படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உணடு. இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம் செலுத்தியுள்ளன.
குடும்பத்தினருடன் இணைந்து
இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றி ருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன் புதுடில்லியில் வாழ்ந்து வருகிறார்.
இன்று உலகில் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000 ஆம் ஆண்டில் இதைவிட 78 மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்காமல், முற்றிலும் இல்லாமல் செய்யும் இலட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கைலாஷ் சத்யார்த்தி பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட் டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.குழந் தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப் பட்டுள்ளது ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்" என கூறியுள்ளார்.
.viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக