ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வாடகை தாய் மூலம் பெறுவதாக கூறி வேறொருவரின் குழந்தையை கொடுத்து ஏமாற்றிய டாக்டர் !

Srushti Global Trust   வாடகை தாய் மோசடி  தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர் கைது பெங்களூரை சேர்ந்தவர் டான் பாஸ்கோ. இவரது மனைவி சரளாதேவி. இந்த தம்பதிக்கு குழந்தை ஏதும் இல்லை. இதற்காக அவர்கள் பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நந்தினி லே–அவுட் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தும் குருமூர்த்தி என்பவர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக டான் பாஸ்கோவுக்கு தெரியவந்தது.இதையடுத்து, கடந்த 2008–ம் ஆண்டு குருமூர்த்தியை சந்தித்து தங்களுக்கு குழந்தை இல்லை என்ற விபரத்தையும், வாடகை தாய்மூலம் குழந்தை பெற்றெடுக்க இருப்பதாகவும் டான் பாஸ்கோவும், சரளாதேவியும் கூறினார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க ரூ.3½ லட்சம் கொடுக்கும்படி குருமூர்த்தி கேட்டார். உடனே ரூ.3½ லட்சத்தையும், தன்னுடைய விந்து அணுக்களையும் டான் பாஸ்கோ குருமூர்த்தியிடம் கொடுத்தார் இந்த நிலையில், பணம் கொடுத்த 7 மாதத்திலேயே, அதாவது கடந்த 23–10–2008–ம் ஆண்டில் பச்சிளம் பெண் குழந்தையை டான் பாஸ்கோ, சரளாதேவி தம்பதியிடம் குருமூர்த்தி கொடுத்தார். 10 மாதங்கள் ஆவதற்குள் குழந்தை எப்படி பிறந்தது என்று குருமூர்த்தியிடம் டான் பாஸ்கோ கேட்டார்.

அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த குருமூர்த்தி, குழந்தை வேண்டும் எனில் வைத்து கொள்ளுங்கள், இல்லையெனில் என்னிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள், நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்று மிரட்டியபடி கூறினார்

ஏற்கனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த டான் பாஸ்கோ, சரளாதேவி தங்களது மனதை தேற்றிக் கொண்டு அந்த 7 மாத குழந்தையை குருமூர்த்தியிடம் இருந்து வாங்கி சென்றனர். ஆனால் மற்ற குழந்தைகளை போல அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையவில்லை. அந்த குழந்தை மிகவும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

இது சரளாதேவிக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. குழந்தையை நினைத்து தினமும் வேதனை அடைந்த சரளாதேவி சமீபத்தில் உயிர் இழந்து விட்டார். இதற்கிடையில், அந்த குழந்தையின் உடல் நிலையும் மிகவும் மோசமானது. இதனால் வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை, தனக்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று டான் பாஸ்கோ கருதினார்.


இதையடுத்து, அந்த பெண் குழந்தை தனக்கு தான் பிறந்ததா என்பதை பரிசோதிக்க, தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு டி.என்.ஏ. மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக டான் பாஸ்கோ அனுமதித்தார். டி.என்.ஏ. சோதனையில் டான் போஸ்கோவுக்கு அந்த பெண் குழந்தை பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள். இதை கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி குருமூர்த்தியிடம் டான் போஸ்கோ கேட்டார்.

அப்போது டான் போஸ்கோவை கொலை செய்து விடுவதாக குருமூர்த்தி மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, நந்தினி லே–அவுட் போலீசில் நடந்த சம்பவங்கள் குறித்து டான் போஸ்கோ புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தனியார் தொண்டு நிறுவன உரிமையாளரான குருமூர்த்தியை நேற்று முன்தினம் நந்தினி லே–அவுட் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, வாடகை தாய் மூலம் டான் போஸ்கோவுக்கு தான் பிறந்தது என்று கூறி கொடுத்ததுடன், ரூ.3½ லட்சம் வாங்கி மோசடி செய்தததும் தெரியவந்தது.

மேலும் டான் பாஸ்கோ தவிர வேறு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பதாகவும், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொடுப்பதாகவும் சொல்லி, ஏராளமானவர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி குருமூர்த்தி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. அதுகுறித்து குருமூர்த்தியிடம் நந்தினி லே–அவுட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். nakkheeran.in

He promised a surrogate mother to a couple for Rs. 3.5 lakh

A fertility specialist has been arrested on charges of running a surrogacy racket, and kidnap and sale of newborns.
Nandini Layout police said K.T. Gurumurthy was arrested based on the complaint filed by Dhan Bosco, a businessman.
Gurumurthy, owner of Srushti Global Trust in Basaveshwarnagar, struck a deal with Dhan Bosco and his late wife, Sarala Devi, to find a woman to be a surrogate mother for their child at a cost of Rs. 3.5 lakh. He collected semen samples from Mr. Bosco in 2008.
After about seven months, Gurumurthy informed Bosco that a girl child had been born to the surrogate mother. But he refused to justify the early birth of the child, and he refused to return the money in case the couple did not want to accept the child.
So the couple took the child home. In due time, they realised that the child was suffering from some ailments. Depressed over the issue, Sarala passed away. Meanwhile suspecting the paternity of the child, Bosco underwent a DNA test that proved that he was not the biological father. Aggrieved by this, he approached the police authorities and charged with kidnap and trafficking of the new born for the purpose of sale, cheating, threatening and criminal intimidation.
Gurumurthy had been arrested in January on charge of cheating at least 19 women after promising them that he would give them IVF treatment.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக