செவ்வாய், 14 அக்டோபர், 2014

விசாரணைக்கு அழைத்துவந்து சுட்டு கொன்ற சப் இன்ஸ்பெக்டர் .ராமநாதபுரத்தில் போலீசின் கொடூரம் !

Man shot dead at police station near Ramanathapuram
MADURAI: A man, who was picked up for questioning after he threatened the public with a knife, was shot dead by a sub-inspector at the S P Pattinam police station in Ramanathapuram district on Tuesday evening.
Tension prevailed in the area after the man, identified as Syed Mohammed, was shot dead by sub-inspector Kalidoss.
Police said Kalidoss opened fire on Mohammed for self-defence when the latter tried to attack him with a knife during questioning. ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டை காவல் நிலையத்தில் இன்று மாலை விசாரணைக்காக அழைத்து வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் சப் இன்ஸ்பெக்டர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ளது எஸ்.சி. பட்டணம். இப்பகுதியைச் சேர்ந்தவர் சையத் முகம்மது. இவருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் சையத் முகம்மதுவை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அதை ஏற்று முகம்மது விசாரணைக்குப் போனார். இன்று மாலை 6 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென காளிதாஸ், துப்பாக்கியை எடுத்து முகம்மதுவை சுட்டு விட்டார். இதில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முகம்மது உயிரிழந்தார். அவர் கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் சப் இன்ஸ்பெக்டர் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சம்பவத்தால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக