வெள்ளி, 31 அக்டோபர், 2014

வாசன் ஞானதேசிகன் தமிழ் மாநில காங்கிரஸ் ? மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடும் மாலுமிகள் ?

சென்னை: தமிழக காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று தமது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஞானதேசிகனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய வாசன், தனிக்கட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஞானதேசிகன் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் தமது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்தார்  காங்கிரசில் இருந்து எல்லா சுகபோகங்களும் அனுபவிச்சாச்சு  இனி புதிய மனகிழ்  மன்றங்கள்  தேவைதானே ?முதல்ல தனிகட்சி  அப்புறம் ஏதாவது ஒரு கூட்டணி  அதுக்கப்புறம்  ஒருவேளை  காங்கிரசே எதிர்காலத்தில் பதவிக்கு வந்தால் நாமெல்லாம் பிறவி காங்கிரஸ் என்று கூறி மீண்டும் கப்பல்ல ஏறிடலாம்ல ?  நாய் புளைப்பு என்கிறது இதுதாய்ன் ?
ஞானதேசிகன். ஆதரவாளர்களுடன் வாசன் 'பரபர' ஆலோசனை: இந்த நிலையில் சென்னையில் தமது வீட்டில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஞானதேசிகனின் ராஜினாமா முடிவை ஆதரிக்கிறேன். அவர் காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளார். தமிழகத்தில் காமராஜர், மூப்பனார் வழிகாட்டுதல் மற்றும் ஆசியுடன் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும் என்றார். அப்போது, காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜி.கே.வாசன் பதில் ஏதும் அளிக்கவில்லை.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக