செவ்வாய், 21 அக்டோபர், 2014

மும்பையில் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளோடு தொடர்பு ? சாப்ட்வேர் எஞ்சினியர் கைது !

ஈராக்கிலும், சிரியாவிலும் சில பகுதிகளை உள்ளடக்கி தங்களுக்கு என்று பிரத்யேக ஆட்சியை நிலைநாட்டுவதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் மும்பை அந்தேரியை சேர்ந்த அனீஸ் அன்சாரி என்ற 24 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் தொடர்பு வைத்ததாக கூறப்பட்டது. மேலும், அவர்கள் பாந்திராவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை தகர்க்க எண்ணியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தீவிரவாத தடுப்பு படையினர் உடனடி நடவடிக்கை எடுத்து அனீஸ் அன்சாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டு உத்தரவின்பேரில் வருகிற 26–ந் தேதி வரை காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக