வியாழன், 23 அக்டோபர், 2014

ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் குறித்து விசாரணை?

புதுடில்லி:'அரியானாவில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனான ராபர்ட் வாத்ராவின், நில பேரங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படலாம்' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சூசகமாகதெரிவித்துள்ளார்.
அரியானாவில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக மனோகர்லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் தலைமையிலான, புதிய அரசு, வரும், 26ம் தேதி பதவியேற்க உள்ளது.
அரியானாவில், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்ற போது, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனான, ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் குறித்தும், அவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் பேசினார்.அதனால், அரியானாவில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரசை  காப்பாத்த இந்த ஆளை சீக்கிரம்  கோட்டுக்கு கொண்டுவாங்க. போயும் போயும் இந்த ஆளை பிரியங்கா காதலிச்சு ....நம்ப ராமதாஸ் அய்யா ஏன் காதலுக்கு மரியாதை கொடுக்க கூடாதுங்கிறார்ன்னு  இப்ப புரியறது

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டி:அரியானாவில், பூபிந்தர்சிங் ஹூடா தலைமையிலான, காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது, சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு, பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதனால், சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில், அவர் பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பெற்றுள்ளார். இது, வழக்கமான வர்த்தக நடவடிக்கையாக இருக்க முடியாது; அதற்கு மேலானது.இவ்வாறு, அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
அருண் ஜெட்லியின் இந்தப் பேட்டியால், அரியானாவில், வரும், 26ம் தேதி பதவியேற்க உள்ள, மனோகர்லால் கட்டாரின் அரசு, ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் குறித்த விசாரணைக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு, அம்மாநிலத்தில் ராபர்ட் வாத்ரா மேற்கொண்ட நிலபேரங்கள் குறித்து, ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக