அமலாக்கப்பிரிவு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு
அம்மாளை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில், பல்வேறு நிறுவனங்களிடம்
இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக
மத்திய அமலாக்கப்பிரிவினர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த
குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு
அம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார் ரெட்டி,
பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித்
உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, உள்ளிட்ட 10 தனி நபர்களின் பெயர்களும்
சுவான் டெலிகாம், குஸேகோன் ரியல்டி, சினியுக் மீடியா, கலைஞர் டி.வி.
உள்ளிட்ட 9 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும் என
கோரி அவரது மகள் செல்வி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்க பிரிவு தொடர்ந்துள்ள
வழக்கிலிருந்து தயாளு அம்மாளை விடுவிக்க முடியாது என கூறி உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது. tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக