திங்கள், 27 அக்டோபர், 2014

விஜயகாந்த் பாணியில் நடிகன் விஜய் ? புள்ளிவிபர பொரியல், திமுக எதிர்ப்பு ! லியாகத் அலிகான் கூடவே இருக்காரோ ?

திடீரென கத்தி பட வசனங்கள் இன்னும் ஞாபகம் இருப்பதால் விஜய்யின்  திடீர் வசனம் : ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் “தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல.
3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு.
தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அடே அடே இத்தினி காலமா கோக கோலா கம்பனிட்ட காசு வாங்கி விளம்பர தூதுவர இருந்துகொண்டு  மலிடி நசனல் கம்பனிகளால ஏழை கஷ்டம் பத்தி வகுப்பு எடுக்கிறே ??
அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா.
20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது.
அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க.இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம்
ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது.5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒருவிவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக