செவ்வாய், 14 அக்டோபர், 2014

அதிஷ்ட பரிசை திருப்பி தந்த காவியா மாதவன்

சென்னை: தனக்கு விழுந்த அதிர்ஷ்ட பரிசை திருப்பி தந்தார் காவ்யா மாதவன்.‘காசி, ‘என் மன வானில் படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை காவ்யா மாதவன். இவர் நிஷால் சந்திரா என்பவரை மணந்தார். பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் காவ்யா மாதவன். இந்நிலையில் இவரும், மலையாள நடிகர் திலீப்பும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் இணைய தளங்களில் தகவல் வெளியானது. இதை மறுத்த திலீப் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தற்போது காவ்யா மாதவன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கேரளா சினி மேக்கப் கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார யூனியன் நடத்திய நிதிதிரட்டும் விழாவில் கலந்துகொண்டார். இதில் நடத்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கலில் காவ்யாவுக்கு இருசக்கர வாகனம் பரிசு விழுந்தது. அதை சங்கத்தினர் அவரிடம் வழங்கினர். ஆனால் உடனடியாக அந்த வாகனத்தை சங்கத்தின் வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் திருப்பி அளித்தார். - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக