செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு

ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அரியானாவில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.அப்போது, ''ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து, சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை,'' என, அவர் கடுமையாகப் பேசினார்.  அதானே  மோடிஜி  ஊயல் பண்ணவிங்க தேவை இல்லை ! அப்ப கொலை பொய்யான என்கவுண்டர் பண்ணினவிங்க ?
அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுஇருக்கிறார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளியே வந்திருக்கிறார். அரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, தீவிர பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊழல் செய்தவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என பேசி, சவுதாலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.அவர், சவுதாலாவைக் குறிப்பிட்டே அப்படி பேசியிருந்தாலும், ஊழல் வழக்கில் சிக்கி, தற்போது ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரைக் குறிப்பிட்டே மோடி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல, தீர்ப்பை வரவேற்று, முதன்முதலில் அறிக்கை கொடுத்தவரும் அவர்தான்.ஆக, அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையில், தமிழக பா.ஜ.,வும், அகில இந்திய பா.ஜ.,வும் சென்று கொண்டிருக்கிறது. சுப்ரமணியன் சாமியும், ஜெ.,வை கடுமையாக விமர்சிக்கிறார். அவரை பா.ஜ., தலைவர்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், சவுதாலாவை விமர்சிப்பது போல, ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.நாளையே, மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையாகி வந்துவிட்டால், மோடி என்ன செய்வார்? இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக