கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வைகோ பேட்டி! பாமக நிறுவனர்
ராமதாஸ் இல்ல திருமண விழா காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில்
வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதனையொட்டி புதன்கிழமை மாலை நடைபெற்ற
விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில்
பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினை சந்தித்துப்
பேசினார்.இந்த
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த
வைகோ, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் நாகரீகம்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான அமைந்த சந்திப்பு. அன்பு
சகோதரர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம்
குறித்து விசாரித்தேன். ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல்
குறித்து பேசவில்லை. கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால்
மகிழ்ச்சி என்றார்.nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக