செவ்வாய், 21 அக்டோபர், 2014

இம்ரான்கான் :நாம் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் சிறுபான்மையோருக்கு சமத்துவம் வழங்குவோம் !


இஸ்லாமாபாத்,அக்.21 (டி.என்.எஸ்) தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இன மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும், சமத்துவ உரிமைகளும் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.இது குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சிறுபான்மை வகுப்பினருக்கான கூட்டம் ஒன்றி இம்ரான்கான் பேசியதாவது:பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக இந்துக்களும், கைலாஷ் சமூகத்தினரும் வெளியேற்றப்பட்டதற்காக வருந்துகிறேன். எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளியேறிய சிறுபான்மை இனத்தவர் அனைவரும் நாடு திரும்ப வந்து விடுவார்கள்.எங்களுக்கு ஆட்சி பொறுப்பு கிடைத்தால் சிறுபான்மை இன மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும், சமத்துவ உரிமைகளும் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்  tamil.chennaionline.com. இப்போ பாகிஸ்தானில் சிறுபான்மையோருக்கு சமத்துவம் இல்லை என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்தற்கு நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக