வெள்ளி, 31 அக்டோபர், 2014

படேல் பிறந்தநாள் மோடி முஸ்தீபு ! இனி இவர்தான் ஜம்மா அம்பேத்கார் நேருவெல்லாம் சும்மா ?

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேலின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரிந்து கிடந்த 562 சமஸ்தானங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டின் இரும்பு மனிதர் என்ற பெயரைப் பெற்றவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது பிறந்த நாள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி டெல்லியில் இன்று ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது. நல்லா தேடிப்பாருங்க வேற குஜாராதிங்களும் வரலாற்றில் இருப்பாய்ங்க அவிங்க பேரிலையும் எதுனாச்சும் கொண்டாடணுல ? வரலாறு முக்கியம் அமைச்சரே?


 ராஜபாதையில் விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரை நடைபெறும் இந்த ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி  வைத்தார். ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள் ,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கையா , ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இதே போன்று ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ”சர்தார் வல்லாபாய் படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை அடைந்திருக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.

முன்னாதாக இன்று காலை பிரதமர் மோடி டிவிட்டரில் கூறுகையில், ”சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய வாழ்க்கை பயணம்  தாய்நாட்டுக்கான  ஆழமான அர்பணிப்பு  மற்றும்  தைரியம் மிக்கது. நவீன இந்தியாவின் உண்மையான சிற்பி அவர்தான்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக