கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக்
கீழ் இயங்கும் ஹோட்டல்களில் உள்ள 700 மதுக் கூடங்களை (பார்) மூடுவதற்கு
அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், பாரம்பரியம் மிக்க ஹோட்டல்கள், நான்கு நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள 33 மதுக் கூடங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் புதிய மதுபானக் கொள்கைக்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் மதுக்கூட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி சுரேந்திர மோகன் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
இதுதொடர்பாக, நீதிபதி தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த மாநிலத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மதுவின் தேவையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.இனி சினிமா அரசியல்போன்ற துறைகளில் உள்ள மாபியாக்கள் மட்டுமே அங்கு மது அருந்தலாம்
மது அருந்தும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மதுக்கூடங்களை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
நான்கு நட்சத்திர ஹோட்டல்கள், பாரம்பரியம் மிக்க ஹோட்டல்கள் ஆகியவற்றையும் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களாகக் கருதி 33 மதுக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 3 வாரங்கள் தடை விதிக்கக் கோரி மதுக்கூட உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உம்மன் சாண்டி வரவேற்பு:
கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி வரவேற்பு தெரிவித்தார்.
இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் மதுக்கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களில் இயங்கும் மதுக்கூடங்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதால், அரசுக்கு பின்னடைவு ஏற்படவில்லை.
இந்த மாநிலத்தில் ஏறத்தாழ 60 மதுக்கூடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உம்மன் சாண்டி கூறினார்.
பின்னணி: வரும் 2023ஆம் ஆண்டுக்குள் மதுபானம் இல்லாத மாநிலமாக கேரளத்தை உருவாக்கும் வகையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உம்மன் சாண்டி அறிவித்திருந்தார்.
முதல் கட்டமாக, ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக் கீழ் இயங்கும் ஹோட்டல்களில் உள்ள 700 மதுக்கூடங்களை மூடுவதற்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, மதுக்கூட உரிமையாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், "கேரள அரசு அவசர கதியில் மதுக்கூடங்களை மூடுவதற்கு முடிவு எடுத்துள்ளது. இதன் விளைவால், மது விற்பனையால் கிடைக்கும் வருவாய் குறையும், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படும்'என்று குறிப்பிட்டிருந்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக