செவ்வாய், 7 அக்டோபர், 2014

வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்- கர்நாடக அரசு பஸ்களும் ரத்து ! மக்கள் பயப்பீதியில் ! எந்நேரமும் கலவரம் வெடிக்கலாம் !

நெல்லை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளியூருக்கு இரவில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்- கர்நாடக அரசு பஸ்களும் ரத்து மாலை 5 மணிக்கு மேல் பஸ்களின் இயக்கம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விஷமிகள் பஸ்களுக்குத் தீவைப்பது, தாக்குவது போன்றவற்றில் ஈடுபடலாம் என்று முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை போக்குவரத்துத் துறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இரவில் இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடகத்திற்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இதையடுத்து அதிமுகவினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பேருந்துகளும் நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக