செவ்வாய், 7 அக்டோபர், 2014

சேதமாக்கப்பட்ட பொது தனியார் சொத்து இழப்பீடுகளை அதிமுகவிடம் இருந்து அறவிட வேண்டும் ! திமுக ஆளுநரிடம் மனு !

சென்னை: ‘தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு குறித்து விவாதிக்கும் வகையில், கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பஸ் எரிப்பு, திமுக அலுவலகங்களை தாக்குவது, தலைவர்களை, தொண்டர்களை தாக்குவது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்கள் அனைத்தும் முன் அனுமதி பெறாமல், சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் அனுமதியின்றி சட்டத்தை மீறி நடத்தப் படுகிறது. மேலும் அவர்கள் பொது சொத்துகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கின்றனர்.


ஆளும் அதிமுக அனைத்து இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் இழப்பீட்டு தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இத்தகைய சட்ட விரோத மீறல்களை அனுமதிக்க கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 3ம் தேதி ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து திமுகவினர் மனு கொடுத்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 8ம் தேதி (நாளை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது மாவட்ட  செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து விவாதிக்கப்படும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக