புதன், 1 அக்டோபர், 2014

நான் பொன்னொன்று கண்டேன்‘ பட ஹீரோயின் அனாமிகா. !

சென்னை: தேனி பஸ் நிலையத்தில் சுற்றி வந்தார் மிஸ் போபால்.‘நான் பொன்னொன்று கண்டேன்‘ பட ஹீரோயின் அனாமிகா. போபால் மிஸ் அழகி பட்டமும், மிஸ் மத்திய பிரதேசம் பட்டங்கள் வென்றவர். அவர் கூறியதாவது:இனிமையான தமிழ் பாடல் ஒன்றை நினைவுபடுத்தும் தலைப்பாக இதன் டைட்டில் அமைந்துள்ளது என்னை கவர்ந்தது. இப்படத்துக்காக தேனி, கம்பம் பகுதி பஸ் நிலையங்களில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றேன். அப்போது மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை அறிந்து கொண்டேன். பணக்கார வீட்டு பெண்ணான என்னை பஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் ஹீரோ அஸ்வின் ராஜ் காதலிக்கிறார்.
அவர் காதலிப்பது எனக்கு தெரியாது. ஆனாலும் அவருடன் நான் பழகுவேன். ஒரு தலை காதல் கதையான இதன் முடிவு என்னை ஜில்லிட வைத்தது. மலைபாங்கான பகுதியில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமான போது கல்லிலும், மண்ணிலும் விழுந்து புரள வேண்டிய காட்சிகளில் உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டது. சஞ்சீவ் சீனிவாஸ் இயக்க சபீர் அலிகான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரேம் கல்லாட், பிரின்ஸ் கல்லாட் தயாரித்திருக்கின்றனர். - .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக